Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேவருக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் இருவர் கொலை: பரமக்குடியில் பதற்றம்!

மோதிக்கொள்ளும் மக்கள்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞர்கள் இருவர் பலியாயினர்.

பரமக்குடியை அடுத்த டி. வேலங்குடியில் இருந்து ஏராளமானோர் ஒரு வாகனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் கிராமத்தின் வழியே வழித்தவறி சென்றுவிட்டனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்த வாகனத்தை வழிமறித்தனர், அதில் இருந்தவர்களை தாக்கினர். இதில் இளைஞர்கள் இருவர் பலியாயினர்.

கிராமத்தினரின் தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்கள் பரமக்குடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து நடவடிக்கை எடுத்த போலிஸார், தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரின் உடல்களைக் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post