Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கேம்ப்ரிட்ஜ் மாணவர்களுக்கு இலவச ஆணுறை: பல்கலைக்கழகத்தின் நூதன திட்டம்!

எதுவும் சாத்தியமே!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை அந்த பல்கலைக் கழகம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, முதலாண்டு படிக்கும் மாணவர்கள் வாரத்திற்கு 60 ஆணுறைகள் வரைக்கும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் பாலியல் கல்வியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், பல்கலைக் கழகத்தில் படிக்கும் 3,500 முதல் ஆண்டு மாணவர்களுக்கு 10,920,000 ஆணுறைகள் வரை ஒரு வருடத்திற்கு செலவாகும்.

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயந்திரத்தில் இருந்து ஆணுறை எடுக்கப்படும்போது, அடையாள அட்டை அவசியம் ஆகும். இந்த அட்டைகளில் பெயர் இல்லாமல், அடையாள எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதால் மாணவரின் தனியுரிமையும் (Privacy) காக்கப்படும் எனவும் அப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும், பால்வினை நோய்கள் மற்றும் தேவையற்ற கருத்தரித்தலை இதன் மூலம் குறைக்க முடியும் என அந்த திட்டத்தின் செயல் அதிகாரி தெரிவித்தார்.

--ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post