Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீர் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம்

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் அமைப்பினர், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள விவசாயிகள் அமைப்பு, ஆளுநர் பரத்வாஜ் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கர்நாடகாவின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தனர். 

இதனிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலைக்குள், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தவில்லை என்றால், மக்கள் யாரும் வரி செலுத்தக் கூடாது என்று காவிரி ஹிதரக்-ஷனா சமிதி அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். 

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள மாவட்ட நிர்வாகம், அதிரடிப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 

இதனிடையே, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா, மைசூர் முதல் மாண்டியா வரை பாத யாத்திரையை தொடங்கியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post