Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

காவல்துறையை மேம்படுத்தும் வகையில் 12 புறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

சென்னை எச்.7 புறநகர் மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டத்தில் சீதபற்பநல்லூர், தென்காசி, வேலூர் மாவட்டத்தில் திம்மம்பேட்டை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள புறக்காவல்நிலையங்கள், முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக 355 காவல் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை குரோம்பேட்டை, திருச்சி மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் புதிய போக்குவரத்து காவல்நிலையங்களை உருவாக்கவும் இதற்கென 50 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர 17 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் நகரத்திற்கென புதிதாக காவல்துறை ஆணையரகம் தோற்றுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் புதிதாக போக்குவரத்து மற்றும் மகளிர் காவல்நிலையங்களை ஏற்படுத்தவும் அதற்கென 536 பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 472 பணியிடங்களை மறுபரவல் முறையில் நிரப்புவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post