Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடும் நெருக்கடியில் தே.மு.தி.க: கட்சி மாறிய எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைசட்டம் பாயுமா?

கேப்டன் என்ன நடவடிக்கை எடுப்பார்?
தேமுதிகவிலிருந்து இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் விலகி உள்ள நிலையில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த தேமுதிக 29 தொகுதிகளை கைப்பற்றி, கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி என்ற தகுதியையும் பெற்றது.

 தேர்தலின்போது அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க, பிரதான எதிர்க்கட்சி ஆனவுடன் மக்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்றவில்லை. ஆளும் கட்சியை விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் தொகுதிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றும் எந்த பயனும் இல்லை என்று பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதங்கத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுந்தரராஜன், தமிழழகன் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் வெள்ளிக் கிழமையன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சனிக்கிழமையன்று அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்தார்கள். இந்த 4 எம்.எல்.ஏக்களின் தடாலடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 எம்.எல்.ஏக்கள் விலகியதால் தற்போது தேமுதிகவின் பலம் 25 ஆககுறைந்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவும் படலம் தொடர்ந்தால் எதிர்க்கட்சி என்கிற தகுதியை தேமுதிக இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவில் இருந்து 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விலகினால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைசட்டம் பாயாது. எனவே பத்து எம்.எல்.ஏக்களுக்கு மேல் கூட்டாக வெளியேற முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தே.மு.தி.க கடும் நெருக்கடியில் உள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post