Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காதே பிரதமருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை நிறுத்துமாறு பிரதமருக்கு கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்து வருகிறார்.தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிருஷ்ணா, காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றுவருவதை சுட்டிக்காட்டியுள்ளார். 

கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறைந்துவருவதாகவும் இதனால் வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் நினைப்பதாகவும் அமைச்சர் கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார். 

வன்முறை பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post