Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் சென்னை அழகி சாவில் மர்மம் நீடிப்பு: 100-க்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் குறித்து ஆய்வு!

முன்னாள் சென்னை அழகி படுகொலை!
மும்பை அந்தேரியில் வசித்து வந்த முன்னாள் சென்னை அழகி பட்டம் பெற்ற பெண் படுகொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். 

முதலில், சர்க்கரை நோய் காரணமாக அவர் கண்ணாடி பலகை மீது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், கூர்மையான ஆயுதம் மூலம் கழுத்தில் குத்தி பிதுஷி கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிற்பகல் பிதுஷி வீட்டுக்கு மர்ம மனிதன் ஒருவன் வந்து சென்றதாக பக்கத்து வீட்டு பெண் கூறினார். அந்த மர்ம நபர்தான் பிதுஷியை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. 

பிதுஷி வீட்டுக்கு வந்த மர்ம நபர் யார்? அவர் ஏன் பிதுஷியை கொலை செய்தார் என்று எதுவும் தெரியவில்லை. பிதுஷியின் கணவர் கேதார் பர்தேயிடம் நேற்று முழுக்க மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது. அவர் சொன்ன தகவல்கள் அடிப்படையில் எந்த துப்பும் இதுவரை துலங்கவில்லை. 

இதையடுத்து பிதுஷியின் செல்போனை மும்பை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பிதுஷி கொலை செய்யப்பட்ட திங்கட்கிழமை மட்டும் அவருக்கு சுமார் 100 தவறிய அழைப்புகள் வந்துள்ளன. அவரை போனில் அழைத்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

கொல்லப்படுவதற்கு முன்பு பிதுஷி யார்-யாரிடம் தொடர்பு கொண்டு பேசினார் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதற்கிடையே திங்கட்கிழமை அவர் இறந்த பிறகு கூட அவருக்கு எஸ்.எம்.எஸ்.சில் நிறைய தகவல்கள் வந்துள்ளது. அந்த எஸ்.எம்.எஸ்.களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் உள்ளது. அதை வைத்தும் மும்பை போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். 

மாடல் அழகி பிதுஷி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த காமிராவில் திங்கட்கிழமை பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் பிதுஷியை கொலை செய்த மர்ம நபரை அடையாளம் காண முடியும் என்று போலீசார் நம்புகிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post