Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்வு - ப.சிதம்பரம்

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்வு நல்ல பயனைத் தரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சரவை முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை கேட்டறிந்து அதன் பிறகே சீர்திருத்த கொள்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தியது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். 

திருச்சி, கோவை, லக்னோ, வாரணாசி , மங்களூர் விமான நிலையங்களுக்கு பன்னாட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவு கேட்கப்படும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உலக வங்கி துணையுடன் குழந்தை கல்வி மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிதம்பரம் தெரிவித்தார்
[vuukle-powerbar-top]

Recent Post