Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உடல் மஞ்சள் நிறமாவதை தவிர்க்க புற ஊதாக் கதிர்களின் கீழ் ஓய்வெடுக்கும் சிறுமி!

புற ஊதாக் கதிர் விளக்கின் கீழ் ஒரு தேவதை...
பென்னிசில்வேனியாவைச் சேர்ந்த 'பிரியன்னா மினிச்' என்கிற ஒன்பது வயதுடைய சிறுமி தினமும் இரவு வேளைகளில் புற ஊதாக்கதிரின் கீழேயே தூங்க வேண்டியுள்ளது. அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறுவதை தவிர்க்கவே, சிறுமிக்கு புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தப் படுகிறது.

பிரியன்னாவின் மன நிலையில் கோபம், அழுத்தம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் அவளது உடல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் குறைபாடே இதற்கு காரணம் ஆகும். 

சிறுமியின் உடலில் உள்ள 'பிலிரூபின்' என்ற வேதிப்பொருளை கல்லீரலால் உடைக்க முடியவில்லை. இதனால், அவளது உடல் மஞ்சள் நிறமாக மாறி விடுகிறது. தினமும் 12 மணி நேரங்கள் வரை புற ஊதாக்கதிரின் கீழ் செலவிடுவதின் மூலம், உடல் மஞ்சள் நிறமாவதையும், குறைபாட்டால் ஏற்படும் மூளைப் புற்றுநோயில் இருந்தும் தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


பிரியன்னாவின் கண்கள் மஞ்சளாக மாறுவதை கவனியுங்கள். 

[vuukle-powerbar-top]

Recent Post