Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் அரசு கேபிள் தொலைக்காட்சி சேவை: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்!

அரசு கேபிள் துவக்கம்!
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கி நடவடிக்கை எடுத்தார். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்' (TAMIL NADU ARASU CABLE TV CORPORATION LIMITED) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தை தவிர மீதமுள்ள 31 மாவட்டங்களிலும் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து வருகிறார்கள். 

தொலைக்காட்சி சேவையை நவீன முறையில் மேம்படுத்துவதற்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் செட்டப்-பாக்ஸ் முறையை அறிமுகம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் சென்னை நகரில் அரசு கேபிள் டி.வி. சேவையை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவையை தொடங்குவதற்கு தேவையான எல்லா உள் கட்டமைப்பு பணிகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உள்ளது. அந்த நிறுவன அலுவல் பகுதியில் சென்னை மாநகர மக்களுக்கு கேபிள் டி.வி. வழங்கும் தனி கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அரசு கேபிள் டி.வி. சேவை நடைபெறும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு கேபிள் டி.வி. சேவையை இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். வீடியோ-கான்பரன்சிங் முறை மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உடனடியாக அரசு கேபிள் டி.வி. சேனல்களை மக்கள் பார்க்க முடிந்தது.

அரசு கேபிள் டி.வியின் இணைய முகவரி:
[vuukle-powerbar-top]

Recent Post