Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புயலுக்கு பெயர் வந்தது எப்படி? சுவாரசியமான தகவல்!

Creative Commons License
'How are Storms and Hurricanes named?' Article by RajTyagi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Permissions beyond the scope of this license may be available at rajtyagi@newsalai.com.
நீங்களும் ஒரு புயல்!
அமெரிக்காவை சக்தி வாய்ந்த புயல் ஆட்டிப்படைக்கிறது. அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் மையம் கொண்ட இந்த புயல் நியூயார்க் மற்றும் நியூஜெர்சியை வரலாறு காணாத அளவிற்கு பாதித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். இந்த வருடம் உருவாகியுள்ள புயலுக்கு 'சாண்டி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உருவாகியுள்ள 'நிலம்' புயலானது தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. கடலில் உருவாகும் புயல்களுக்கு மனிதர்களின் பெயர் சூட்டும் வழக்கம் எப்படி உருவானது என்பதைப் பார்ப்போமா?

இயற்கையாக உருவாகும் புயல்/சூறாவளிகளுக்கு சாதாரணமாக சுழற்சி முறையில் பெயர் சூட்டப்படுவதில்லை. இதற்குப் பின்னால் ஒரு அறிவியலே உள்ளது. ஐலா, பியான், லைலா, பெட், கிரி மற்றும் காத்ரீனா போன்ற பெயர்கள் சாதாரணமாக தோன்றினாலும், இந்த பெயர்களை சூட்டுவது அறிவியலாளர்களுக்கு பெரிய வேலையாக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், புயல்களுக்கு பெயர் சூட்டுவது பற்றிக் கூறும்போது, "புயல்களுக்கு பெயர் சூட்டுவதின் மூலம் வருடங்கள் பல கடந்தாலும், புயலை இனங்காண முடியும். மேலும் இந்த புயல்களின் பெயரை சொல்லும்போது மக்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்" என்று கூறியுள்ளது. 

எந்த அடிப்படையில் பெயர் சூட்டப்படுகிறது?

1950-களில் இரண்டாம் உலகப் போரின் போது இந்த வழக்கம் துவங்கியது. இராணுவத்தில் பணிபுரிந்த வானிலை ஆய்வாளர்கள் பெண்கள் பெயரை புயலுக்கு வைத்தனர். ஆனால், அப்போது இராணுவத்தால் மட்டுமே இந்த பெயர் அறியப்பட்டது. பின்பு, 'உலக வானிலை மையம்' புயலுக்கு பெயர் சூட்டும் முறையை ஏற்றுக்கொண்டது. ஒரு குறிப்பிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவை, முதலெழுத்து வரிசை முறையில் வருமாறு தொடர்ந்து சூட்டப்படுகிறது. சில வருடங்களுக்கு ஒரு முறை, நிலுவையில் உள்ள, உபயோக்கிக்கப்படாத பெயர்கள் மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. 

ஆசியக் கண்டத்தில் வைக்கப்படும் பெயர்கள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் சுழற்சி முறையில் சூட்டப்படுகிறது. தற்போது, உருவாகியிருக்கும் புயலுக்கு சூட்டப்படிருக்கும் 'நிலம்' என்ற பெயர் பாகிஸ்தான் பரிந்துரைத்த பெயராகும். அடுத்த புயலுக்கு இந்தியா பெயர் சூட்டலாம்.


புயல்/ சூறாவளிகளுக்குப் பெரும்பாலும் பெண்கள் பெயரே சூட்டப்படுவது ஏன்?


சில சமயங்களில், ஆஸ்திரேலிய வானிலை ஆய்வாளர்கள் தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயரையும், விவாகரத்து செய்த மனைவியின் பெயரைக் கூட  சூட்டியிருக்கின்றனர் என்பது வியப்பளிக்கும் தகவல்.  இனி 'அழகிய புயலே' என்று உங்கள் மனைவியை அழைக்கலாம்.

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post