Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கும் மிட் ராம்னிக்கும் இடையே, நெருக்கமான போட்டி

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கும் மிட் ராம்னிக்கும் இடையே, நெருக்கமான போட்டி இருப்பதை பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், உறுதி செய்திருக்கின்றன. அதிபர் தேர்தலுக்கு இன்னும் தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ளன.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ராம்னியும் தங்களது உச்ச கட்டப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். ஓஹியோ மாநிலத்தில் ஒபாமாவும், நெவேடா மாநிலத்தில் ராம்னியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இரு வேட்பாளர்களுக்கும் நெருக்கமான போட்டி இருப்பதை கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தி வருகின்றன. மூன்றாவது நேரடி விவாதத்துக்கு முந்தைய நாளில், GALLUP நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவும் ராம்னிக்கு 51 சதவீத ஆதரவும் இருப்பதாகத் தெரியவந்ததது.

ABC – வாஷிங்டன் போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், ஒபாமாவை விட ராம்னிக்கு ஒரு சதவீத ஆதரவு கூடுதலாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணிப்பில், இருவருமே 47 சதவீத செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.

இப்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளை ஒருங்கிணைத்து பி.பி.சி நிறுவனம் அளித்திருக்கும் சராசரி மதிப்பீட்டில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவும் ராம்னிக்கு 48 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post