Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கருணாநிதி தொடங்கி வைத்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக துண்டு பிரசுரம்

அதிமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில், இன்று திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். சென்னை வில்லிவாக்கத்தில் அன்பழகனும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர்.

காவல் துறையினர் அனுமதி வழங்காத காரணத்தால், இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் :

1945-ம் ஆண்டு பெரியார் தொடங்கிய கருப்புச் சட்டைப் படையின் முதல் உறுப்பினராக ஈரோட்டில் தான் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்த கருணாநிதி, அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இனி தொடர்ந்து தான் கருப்புச் சட்டை அணியப் போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post