Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற இழிவை எடுத்துக்காட்ட கருப்புச்சட்டை அணிந்த கருணாநிதி

தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற இழிவை எடுத்துக்காட்ட கருப்புச்சட்டை அணிந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இழிவைப் போக்க எடுக்கப்படும் முயற்சிகளை கருப்புச் சட்டங்களைக் கொண்டு அடக்க முயலும் ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டையுடன் வந்திருப்பதாக கருணாநிதி கூறினார். 

அக்டோபர் 5ந்தேதி கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த போவதாக அறிவித்த திமுக, பல இடங்களில் அனுமதி கிடைக்காததால், 5, 6, 7 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இதற்காக தான் தற்போதே கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post