Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாகையில் கடல் சீற்றம்: கரை திரும்ப முடியாமல் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தவிப்பு!

A Drowning Fishing Boat In Nagappattinam (File Photo)
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையினால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 50 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு முதல் கடலில் அதீத காற்றும், கடல் சீற்றமும் காணப்படுவதால், அவர்களால் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 50 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், கரைக்கு திரும்பாமல், நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில்  கடல் கொந்தளிப்பு காரணமாக வேதாரண்யத்தைச் சேர்ந்த ஒரு படகு கவிழந்தது. இதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

கவிழ்ந்த படகு கடலில் மூழ்கியது. மேலும் இரண்டு மீனவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post