Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை நவம்பர் 5ம் தேதி ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை நவம்பர் 5ம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைப் பெரியாறு அணை தொடைர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி :

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தை ஐவர் குழுவினர் பரிசலீத்த விவரங்களில் சில பிழைகள் இருப்பதாக கூறினார். அவற்றை சுட்டிக் காட்ட தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அனுமதி கோரினார்.

கேரள வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட டி.கே.ஜெயின் உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் :

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவினர் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிசீலனை முடிவுகள் சரியில்லை என கூறினால், பின்னர் தமிழக அரசும் புள்ளி விபரம் சரியானது தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் பதிலளிக்கும்.

இப்படியே சொல்லிக் கொண்டு போனால், வழக்கு மீதான வாதத்தை எப்போது தொடங்குவது என கேள்வி எழுப்பினர். மேலும் புதிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீதான வாதத்தை நவம்பர் 5ம் தேதியன்று தொடங்க வேண்டும் என கூறி நீதிபதிகள் வழக்கின் மீதான இன்றைய விசாரணையை முடித்துக் கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post