Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஏற்றம்

கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஏற்றம் கண்டது.

இன்று நடைபெறப் போகும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காப்பீட்டு துறையில் அந்நிய நிறுவனங்களின் பங்களிப்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாகவும், ஓய்வூதிய துறையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பான அனுமதியும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று காலை நிலவரப்படி 171 புள்ளிகள் அதிகரித்தும் 19 ஆயிரத்து 40 புள்ளிகளை கடந்தும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டெண் நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 5 ஆயிரத்து 787 புள்ளிகளைக் கடந்தும் தற்பொழுது வர்த்தகமாகின்றன. 

மும்பை பங்குச்சந்தையில் இன்று 64 சதவீத பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அதே போல் வங்கி, வீட்டுமனைத்துறை போன்ற துறைகள் ஏற்றம் கண்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post