Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

52 ஆண்டு கால தமிழினப் படுகொலைகள்: ஜெர்மனி மொழியில் நூல் வெளியீடு!

Damit wir nicht vergessen… Massaker an Tamilen 1956–2008
உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் "1956 முதல் 2008 வரையிலான தமிழினப்படுகொலைகள்" என்ற ஜெர்மன் மொழி நூல் நேற்று வெளியிடப்பட்டது .

உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் 'Damit wir nicht vergessen… Massaker an Tamilen 1956–2008' எனும் தலைப்பில்  ஜெர்மனியில் ஃபிரான்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் நேற்று வெளியிடப்பட்டது .

இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக இந்நூலை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீட்டர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார் . அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும் அத்தோடு தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் திரு.ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர் . 

பேராசிரியர் பீட்டர் சால்க் அவர்கள் உரையாற்றுகையில் "இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் இந்நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது . அந்த வகையில் இவ்வாறன குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த இவ் ஆவணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் .

திரு.ரொபின்சன் அவர்கள் உரையாற்றுகையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை. அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற வேளையில் , இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்ப்பணித்தவர்களை நினைவில் பதித்து இதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும் உதவியை செய்த பேராசிரியர் பீட்டர் சால்க், அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார் . 

இந்நூலை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :

Draupadi Verlag
Dossenheimer Landstr. 103
69121 Heidelberg
[vuukle-powerbar-top]

Recent Post