அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதி கட்ட விவாதத்தின் போது, வெளியுறவுக் கொள்கை குறித்து, ஒபாமாவும், மிட் ரோம்னியும் காரசாரமாக விவாதித்தனர்.
ஃபுளோரிடாவில் நேற்று நடந்த விவாதத்தில் பேசிய ரோம்னி, அணுஆயுதத்துக்கு தயாராகும் ஈரானை அங்கீகரிக்கும் விதத்தில் ஒபாமா செயல்படுவதாகச் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த ஒபாமா, தாம் அதிபராக இருக்கும்வரை, ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்று கூறினார்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னை, பாகிஸ்தானுக்கு உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த விவாதத்தில் ஒபாமா வெற்றி பெற்றதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.