Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அமைச்சரவையில் சில மத்திய அமைச்சர்கள் மாற்றம்

மத்திய அமைச்சரவை வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றி அமைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 15 பேர் சேர்க்கப்படலாம் என்றும், பெரும்பாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு தர பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்தும் காங்கிரஸ் மேலிடத்தில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனிடையே, சல்மான் குர்ஷித்தும், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வாலும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அமைச்சரவை மாற்றத்தில் இணைய திமுக மறுத்துள்ள நிலையில், புது முகங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மானிக் தாகூர் இணையமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழரான மீனாட்சி நடராஜனும் அமைச்சரவையில் இணையக்கூடும். மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் தீபா தாஸ் முன்ஷி, அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா, குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படக்கூடும்.

காங்கிரஸ் கட்சியுடன் தனது பிரஜா ராஜ்யம் கட்சியை இணைத்த நடிகர் சிரஞ்சீவி கேபினெட் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினர்.

மேலும், அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானார். இத்தகைய காரணங்களால் காலியாக உள்ள துறைகளுக்கு தற்போது புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post