Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் கேட்டு ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, வெறும் 5 ஆண்டுகாலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ஜெகன்மோகன் ரெட்டி முறைகேடாக சம்பாதித்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் தனது தந்தை முதலமைச்சராக இருந்ததை பயன்படுத்தி இவ்வளவு சொத்துக்களையும் குவித்திருப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதாகவும் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் ஜெகன்மோகனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் வாதிடப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு தற்போதைய சூழலில் ஜாமின் வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். 

மேலும் அவரது ஜாமின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்தவரான ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல மாதங்களாக ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post