Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உத்தரபிரதேசத்தில் பேருந்து மீது மின்சார கம்பி அறுந்து விழுந்து 12 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பேருந்து மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜகநாபாத்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்தது. இதனால் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் கூச்சலிட்டதில் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற உதவினர். கடும் போராட்டத்திற்குப் பின்னர் 12 பேரை அவர்கள் காப்பாற்றினர்.

மேலும் சிலர் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு தப்பினர். இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை ஃபதேபூர், கான்பூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post