Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

கனடாவின் குயின் சார்லோட்டி தீவு!
கனடா நாட்டில், நேற்று 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கனடா நாட்டின், குயின் சார்லோட்டி தீவு அருகே, நேற்று முன்தினம் இரவு, 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஹவாய் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து ஹவாய் தீவை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக கூறி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், கடலில் ஏற்பட்ட அலைகள் வலுவானதாக இல்லாததால், சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தால், கனடா நாட்டில் பல இடங்களில், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post