Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமர் மீது நரேந்திர மோதி குற்றச்சாட்டு

சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு பணம் செலவழித்திருப்பது குறித்த பிரச்னையில், பிரதமர் மன்மோகன் சிங் தவறான தகவல்களைத் தருவதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாம் நகரில் தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், சோனியாவின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு எவ்வித பணமும் செலவழிக்கவில்லை என்று கூறி இருந்த நிலையில், தற்போது மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பெற்ற தகவல்களில், சோனியாவின் பயணஙகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் மோதி குற்றம் சாட்டினார்.
[vuukle-powerbar-top]

Recent Post