Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை வளாகத்திலிருந்து பிரித்வி-2 ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. 

இந்த சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

பிரித்வி-2 ஏவுகணை அணுகுண்டை சுமந்தபடி 350 கி.மீ வரை சென்று தாக்கக்கூடிய திறன் படைத்தது. 

தரையில் இருந்து மற்றொரு தரை இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, 500 கிலோ கிராம் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும். 9 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post