Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"இரயில் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் வரவேற்பார்கள்": அமைச்சரின் கருத்துக்கு மக்களிடையே எதிர்ப்பு!

அமைச்சராக பதவியேற்ற ஒரு நாளைக்குள் கட்டண உயர்வுக்கு திட்டமிட்டார்!
ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் இதனை வரவேற்பார்கள் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் சூசகமாகத் தெரிவித்துள்ள கருத்துக்கு மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் பன்சல் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

ரயில்வேயில் தரமான சேவைகளை வழங்குவதற்காகவே கட்டணம் உயர்த்தப்படும். வேண்டுமென்றே ரயில் கட்டணம் உயர்த்தப் படுவதல்ல என அவர் தெரிவித்தார்.

மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் அதை வரவேற்கவே செய்வார்கள். காரணம் அந்த அளவுக்கு சேவைகளும் சிறப்பாக இருக்கும் என்று பவன் குமார் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post