Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது பாம்புத்தோல் கார்!

பாம்புத்தோல் கார்!
பாம்புத்தோல் உபயோகப்படுத்தப்பட்ட கார் ஒன்று அடுத்த வருடம் விற்பனைக்கு வர உள்ளது. 2013-சீனாவின் பாம்பு வருடத்தை சிறப்பிக்கும் வகையில், காரின் உள்ளறை மற்றும் மேல் மூடி ஆகியவற்றை பாம்பின் தோலால் செய்யப்பட்ட சிறப்பான கார் ஒன்றை டார்ட்ஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கொண்டு வரவுள்ளது.

பென்ட்லி ஜி.டி வகை கார்களில், இந்த கார் சிறப்பானதாக இருக்கும். மிகவும் ஆடம்பரமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை, இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். பண்ணைகளில் வளர்க்கப்படும் பாம்புகளின் தோலில் ரசாயன மாற்றம் செய்யப்பட்டு உறுதியான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விலங்குகள் நல ஆர்வலர்களையும் கவருவதற்காக, பாம்புத் தோலைப் போன்றே காட்சி தரும் 'வினைல்'-ஆல் செய்யப்பட்டுள்ள காரையும் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படங்கள்:





[vuukle-powerbar-top]

Recent Post