Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மம்தா பானர்ஜி முடிவு!

காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கையில்லை!
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது அவர் இதைத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:÷மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த அரசை நாங்கள் விரும்பவில்லை. தேவைப்பட்டால் இந்த அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் தயாராக உள்ளோம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகளை எடுத்த மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளோம். திரிணமூல் காங்கிரஸின் இந்நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.




[vuukle-powerbar-top]

Recent Post