Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்னும் 5 ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம்: மன்மோகன் சிங் வகுக்கும் தேர்தல் வியூகம்!

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அடிபோடும் சிங்!
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இப்போது நாட்டில் சில ஆயிரம் கிராமங்களில் மட்டுமே மின்வசதி இல்லை. 10 லட்சம் வீடுகளில் சூரியஒளி மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புறநகர்ப் பகுதி மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்பகுதிகளிலும் எரிவாயுவை பயன்படுத்தவேண்டும் என முயற்சி செய்து வருகிறோம்.

மொத்தம் உள்ள 19 கோடி கிராமப்புற மக்களில் 12 சதவீதம் பேர் இப்போது சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். தற்போது ஒரு ஆண்டுக்கு 6 சிலிண்டர் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், கிராமப்புறங்களுக்கு கூடுதலாக எரிவாயு இணைப்பு கிடைக்கும்.

மேலும் விறகுகளைப் பயன்படுத்தி அடுப்பு எரிக்கும் பெண்களின் சுமையும் குறைக்கப்படும். தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயோ கேஸ் பயன்படுத்தி வருகின்றனர். எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு பற்றிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்பவே அடித்தளம் போடுகிறாரோ எனவே எண்ணத் தோன்றுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post