Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்து, சாலையோர மரத்தில் மோதி விபத்து

விழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால், சில பயணிகளை தரையிலேயே படுக்க வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஆசாரங்குப்பம் அருகே சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தின் ஓட்டுனர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என பயணிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post