Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதில் விதிமீறல்: தேர்தல் ஆணையம் விசாரணை!

கட்சிகளிடம் குவியும் பணம்!
வெளிநாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை நன்கொடை பெற்றதில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது மத்திய தேர்தல் ஆணையம். இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்தியரான அகர்வாலுக்குச் சொந்தமான சர்வதேச நிறுவனமான வேதாந்தா குழுமத்திடம் இருந்து இரு கட்சிகளும் தலா ரூ. 5 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

காங்கிரஸ் மற்றும் பாஜக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா குழுமத்திடம் ரூ. 5 கோடி நன்கொடையை நேரடியாக பெறாமல் அதன் துணை நிறுவனங்களான ஸ்டெர்லைட், சீசா கோகோ குழுமம் ஆகியவை மூலம் அதாவது மூன்றாம் நபர் மூலமாக நிதியைப் பெற்றிருக்கின்றன. இப்படி மூன்றாம் நபர் மூலமாக நிதி பெற்றாலும் தவறுதான் என்கிறது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.

முதல் கட்ட விசாரணையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29பி பிரிவை இந்த இரு கட்சிகளும் மீறியுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்திய அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெறக்கூடாது என்பது விதி. இதை இரு கட்சிகளும் மீறியுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதில் அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post