Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கி.பி 3000-இல் மனிதன் எப்படி தோற்றமளிப்பான்? (படங்கள் இணைப்பு)

கி.பி 3000 ஆண்டின் மனிதன்!
பரிணாம வளர்ச்சியானது பூமியில் வாழும் உயிர்களுக்கு இன்றியமையாததாகும். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் எப்படி தோற்றமளிப்பான் என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து கற்பனையாக வரையப்பட்ட படம் ஒன்றை 'தி சன்' பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

-இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 3000 ஆண்டுகளில் நாம் 6 முதல் 7 அடி வரை உயரமாக இருப்போம். ஏனெனில், தற்போது உள்ள உணவுப்பழக்கம் மற்றும் மருந்துகள் நம்மை உயரமாக வளர வைப்பதாக உள்ளது. 1960-களில் வாழ்ந்த அமெரிக்கர்களை விட, தற்போது உள்ள அமெரிக்கர்களின் உயரம் அதிகமாக உள்ளதே இதற்கு சான்றாகும்.

-நமது குடல் நீளம் குறைந்து சுருங்கி இருக்கும். இதனால் உறிஞ்சப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவானது  குறைவாகவே இருக்கும்.

-விதைப் பையின் அளவு சிறுத்து, ஆண்மைக்குறைவு பரவலானவர்களுக்கு ஏற்படும்.

-மூளையின் அளவு சிறியதாகி, சிந்திக்கும் திறன் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கும். கணினியே சிந்திக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும்.

-கை, கால்கள் நீளமாக வளர்ந்து தோல்களில் சுருக்கம் அதிகரித்திருக்கும். தோல் சிறிதளவு கருப்பாக மாறியிருக்கும்.

-சிறிய வாயும், பெருத்த கண்களைக் கொண்டு காணவே சகிக்காத வகையில், மனிதர்கள் இருக்கப் போவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

-இதை விட முக்கியமான செய்தி என்னவென்றால், நம் உடலில் முடிகளே (தலைமுடி, இமை முடிகள் உட்பட) இருக்காதாம்! 

நல்ல வேளை, அப்போதுள்ள மனிதனாவது தொலைக்காட்சிகளில் பாடாய்ப் படுத்தும் தலைமுடி பராமரிப்பு விளம்பரங்களிலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருப்பான்!

படம் நன்றி: தி சன் பத்திரிக்கை, நியூயார்க்.

ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post