Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மைக்ரோசாப்ட்டின் புதிய விண்டோஸ் அறிமுகம்

உலகம் முழுவதும் 150 கோடி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் இயங்கு தளத்தின் புதிய பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. 

டேப்லெட், ஸ்மார்ட் போன் என கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பம் விரிவடைந்திருக்கும் நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய விண்டோஸ் பதிப்பை, மைக்ரோசாப்ட் உருவாக்கியிருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்டார்ட் மெனு, டெஸ்க்டாப் எனப்படும் முகப்புத் திரை, கோப்புகளை சேமிக்கும் விதம் என அனைத்திலும் புதுமை புகுத்தப்பட்டிருக்கிறது. இன்று முதல் புதிய விண்டோஸ் பதிப்பை மைக்ரோசாப்டின் இணையதளத்தில் உரிய விலை கொடுத்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ஏற்கெனவே விண்டோஸ் 7 பதிப்பை வாங்கியவர்களுக்கு இதில் சலுகை உண்டு. சரிந்து கொண்டிருக்கும் மைக்ராசாப்டின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு, விண்டோஸின் இந்தப் புதிய அவதாரம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில் விண்டோஸ் 8 இயக்க அமைப்பு தோல்வியடைந்தால், மைக்ராசாப்ட் ஆபிஸ் உள்ளிட்ட பிற மென்பொருள்களுக்கும் அது பாதிப்பாக அமையும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post