Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ப.ழ.நெடுமாறன் உட்பட கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கைது!


சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டனர். 

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு கட்சியினர் சார்பில் இன்று தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருந்தது.

இதற்காக நேற்றில் இருந்தே ஏராளமானோர் சென்னையில் குவிந்தனர். இந்த நிலையில், இன்று காலை பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட கோட்டையை நோக்கி புறப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ஜவஹிருல்லா ஆகியோரை வழியிலேயே, தடுத்து நிறுத்திய காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஏராளமானோரை கைது செய்தனர். தற்போது ப.ழ நெடுமாறனும் கைது செய்யப்பட்டு விட்டதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர் கூறுகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post