Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இன்றும் தாக்குதல்: 9 மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தினம் ஒரு தாக்குதல்!
ராமேஸ்வரம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அரிவாளால் வெட்டி கடலில் வீசிவிட்டு 9 மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துச் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பிக்கொண்டு புறப்பட்டனர். இதில் 3 படகுகள் மாலையில் கரை திரும்பின. மற்ற படகுகளில் உள்ள மீனவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமீபத்தில் தான் இந்தியக் கடற்படைக்கு ஸ்பெயின் நாட்டின் அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வாங்கிக் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசோ தமிழ்நாட்டு மீனவர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
[vuukle-powerbar-top]

Recent Post