Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழுக்கு வந்த சரீன் கான்.


"வீர்" என்ற இந்திப்படத்தில்,சல்மான் கான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை, சரீன் கான்.அண்மையில் வெளியான "ரெடி" மற்றும் "ஹவுஸ் புல் 2 "ஆகிய இந்திப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

அண்மையில்,"நான் ராஜாவாக போகிறேன்" என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடனமாட  சென்னை வந்திருந்த  சரீன் கான்,ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவான பாட்டிற்கு தனது கால்களை அசைத்துவிட்டு மீண்டும் மும்பை சென்றுள்ளார்.

தென் இந்திய சினிமாவின் பரம விசிறி நான் எனக் கூறிய நடிகை சரீன் கான்,இங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு இந்திய சினிமாவில் முக்கியமானதாக விளங்குவதாக  கூறினார்.

தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க ஆசைப்படுவதாகவும்,அது நடக்கும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் நிச்சயம் முதல் இடத்தை தன்னால் எட்ட முடியும் எனவும் கூறினார்.


[vuukle-powerbar-top]

Recent Post