Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மம்முட்டியுடன் ஜோடி சேரும் கனிகா.


"5 ஸ்டார்" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கனிகா.இப்படத்திற்கு பின்னர் ஒரு சில குறிப்பிட்ட தமிழ் படங்களிலேயே இவர் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் இவர்   பிரகாசிக்க தவறினாலும்,மலையாள திரையுலகத்தில் மிக பரபரப்பாக நடித்துக்கொண்டுள்ளார்.

மலையாள திரையுலகில்  தனக்கான ஒரு பெயரை தக்க வைத்துள்ள கனிகா, தற்போது நடிகர் மம்முட்டியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஏற்கனவே நான்கு படங்களில் நடிகர் மம்முட்டியுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களுக்கு மலையாள சினிமா பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்திருந்தது.

இப்படத்தின்  கதாபாத்திரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை கனிகா,இப்படத்தின் கதாபாத்திரமானது தன்னுடைய முந்தைய படங்களின் கதாபாத்திரம் போல் அல்லாமல்,வித்தியாசமானதாக இருப்பதாவும்,இப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக வீட்டு வேலை செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறினார்.

[vuukle-powerbar-top]

Recent Post