Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இராணுவத்தை கர்நாடகவுக்கு காவிரி தண்ணீர் திறந்து விட அனுப்பு - ராமதாஸ்

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ராணுவத்தை அனுப்பி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் மீறியுள்ளது, இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும், காவிரி பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக இல்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பிரச்னையில் கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகிறது, ஆனால் அந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post