Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முக்கிய இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு.


"வெண்ணிலா கபடிக்குழு" படத்தின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகர், விஷ்ணு.அப்படத்தின் பின்னர் அனைவர் மனதிலும் மிக பெரிய இடத்தை பிடித்திருந்தார்.

அப்படத்தில் வரும்  கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்விலும் மிகவும் பணிவானவர் விஷ்ணு.அண்மையில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள " நீர் பறவை" படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய விஷ்ணு,அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக வெற்றிகரமாக நடாத்திக் கொடுத்த அத்தனை இயக்குனர்களுக்கும் தனது நன்றியை தனது ஆழ் மனதிலிருந்து தெரிவித்துள்ளார்.

"நீர் பறவை" படத்தின் முன்னோட்டக் காட்சியை  பார்த்து விட்டு தன்னை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல் கொண்டு சுந்தர்.சி., சுசீந்திரன், ராஜேஷ் மற்றும் பாலு மகேந்திரா ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

மேலும் தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அழகு படுத்திய வைரமுத்து மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post