Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் மின் பிரச்சனை தொடர்பாக புகார் தெரிவிக்க இயங்கி வந்த தொலைபேசி எண்ணின் சேவை நிறுத்தம்

சென்னையில் மின் பிரச்சனை தொடர்பாக புகார் தெரிவிக்க இயங்கி வந்த தொலைபேசி எண்ணின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மின்வாரிய புகார் பிரிவு பாதிப்பு : 

சென்னையில், இதுபோன்ற புகார்களை பலர் கூறுவதை தற்போது அதிக அளவில் கேட்க முடிகிறது. மின்பழுது தொடர்பான பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க மின்சாரவாரியத்தில் இயங்கி வந்த 155333 என்ற தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லாதததே இதற்கு காரணமாகும். தனியார் கட்டுப்பாட்டில் புகார் எண் : 

ஊழியர்கள் வேலை நிறுத்தம்இந்த உதவி எண் பிரிவு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ளது, ஊதிய உயர்வு தொடர்பாக புதிய ஒப்பந்ததாரருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் அந்த தொலைபேசி எண்ணின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக எண்கள் அறிவிப்பு : 

நிர்வாக சிக்கல் காரணமாக இந்த உதவி எண் சிலநாட்களுக்கு இயங்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

இதற்கு பதிலாக 28521109, 28524422 ஆகிய இரண்டு புதிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post