Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அதிபருக்கு உதவப்போய் அவமானப்பட்ட ஜி.எல்.பீரிஸ்

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் இலங்கை அதிபருக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூற முற்பட்ட இலங்கை  வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவமானப்படுத்தப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்த கடந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை  அதிபர் மகிந்த ராஜபக்ச ஆராய்ந்திருந்தார். 

அந்தக் கூட்டத்தில் இலங்கை  வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பங்கேற்கவில்லை. 

அவர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியுயோர்க் சென்றிருந்தார். 

இந்தநிலையில், நியுயோர்க்கில் இருந்து இந்தப் பிரச்சினை குறித்து அறிந்து கொண்ட ஜி.எல்.பீரிஸ், கடந்த புதன்கிழமை இரவு  இலங்கை  அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

இந்த விடயத்தில் முடிவுகளை எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்றும், நிலைமையை மெதுவாக கையாளலாம் என்றும் அவர் கூறியதுடன், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தாம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அதற்கு கோபத்துடன் பதிலளித்த இலங்கை  அதிபர் மகிந்த ராஜபக்ச, இங்கு நடக்கின்றவற்றை தான் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும், எதற்கான உம்மை அனுப்பினோமோ அந்த வேலையை அங்கே ஒழுங்காகப் பார்க்கும் படியும் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post