Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடிகர் சரத்குமாரின் 'மீடியா வாய்ஸ்' இதழின் மீது சட்ட நடவடிக்கை - உதயகுமார் அறிவிப்பு


இன்று அணுஉலைப் போராளி திரு உதயகுமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு .. 

சவத்துவக் கட்சியின் தலைவர் நடத்தும் பத்திரிகையின் 20.10.2012 இதழில் ஒரு தலைப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் “வேண்டும் கூடங்குளம் – நெருக்கும் தலைவர்கள், நொறுங்கும் உதயகுமார்” என்ற தலைப்பில். இந்த மாதிரி பத்திரிகைகளை நான் படிப்பதில்லை; ஆனால் என் பெயரைப் பார்த்தவுடன் தமிழர் களம் தலைவர் அண்ணன் அரிமாவளவன் இதை வாங்கி வந்தார். இந்தக் கட்டுரையில் ஐந்து தலைவர்கள் கருத்துக்களை படங்களுடன் போட்டிருக்கிறார்கள். 

அவர்களுள் நான் மிகவும் மதிக்கிற திரு. தமிழருவி மணியன் அவர்களையும், கவிக்கோ திரு. அப்துல் ரகுமான் அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்டிருக்கிற அவர்கள் கருத்துக்கள் பற்றிப் பேசினேன். இருவருமே தாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்றும், தங்கள் கருத்துக்களை முற்றிலும் திரித்து தவறாக வெளியிட்டிருப்பதாகவும் சொன்னார்கள். திரு. தமிழருவி மணியன் அய்யா அவர்கள் “இந்த பத்திரிகை ஒரு ஃபால்ஸ் வாய்ஸ்” என்று சொல்லி, தான் மறுப்பு அறிக்கை விடப்போவதாகச் சொன்னார்கள்.

திரு பொன். ராதாகிருஷ்ணன் “உதயகுமார் ஒரு தேச துரோகி” என்று சொன்னதாக வெளியிட்டிருக்கிறார்கள். திரு டி.கே. ரங்கராஜன் “உதயகுமாரை நேரிடையாக அரசு எதிர்கொள்ள வேண்டும்” எனச் சொல்லியிருப்பதாக அச்சடித்திருக்கிறார்கள். திரு. ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் “உதயகுமாரை ஜனநாயக முறையில் அடக்க முடியாது. நேதாஜி பாதையில் சென்றுதான் அவரை அடக்க முடியும். அடக்கியே தீரவேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். 

இந்த மூன்று பேரும் உண்மையிலேயே இப்படி பேசியிருந்தால் இந்தக் கருத்துக்கள் என்னுடைய உயிருக்கும் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. என்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் இந்த மூன்று தலைவர்கள் மீதும், இந்த சவத்துவ பத்திரிகையின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்து கொண்டிருக்கிறேன். 

வணக்கம்.
 சுப. உதயகுமார்
அக்டோபர் 15, 2012

[vuukle-powerbar-top]

Recent Post