Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சத்துணவுப் பணியாளர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது ~ மதுரை உயர்நீதிமன்ற

தமிழகம் முழுவதும், சுமார் 28 ஆயிரத்து 500 சத்துணவுப் பணியாளர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, அதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில், காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 

இதில் சம்பந்தப்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்களுக்கு, அந்த மையங்களில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 28 ஆயிரத்து ஐநூற்றுக்கும் அதிகமான சத்துணவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் நீதிபதி வினோத் கே.சர்மா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தமிழக அரசின் சத்துணவுப் பணியாளர் நியமனம் செல்லாது என்று கூறினார். 

இதுதொடர்பான அரசாணையையும், பணியாளர் நியமனங்களையும் ரத்து செய்யவும் உத்தரவிட்டார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் குழு ஒன்றை ஏற்படுத்தி 2 மாத காலத்திற்குள் இந்தப் பதவிகளுக்கு புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post