Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழில் அதிகரித்து செல்லும் குற்ற செயல்களுகம் பாலியல் வல்லுறவுகளும்!

கடந்த 9மாதங்களில் யாழில் 19 கொலை சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவு சம்பவங்களும் பதிவாகியுள்ளது பாதிவாகாத பல சமூகவிரோத செயல்களும் இடம்பெற்றுள்ளது.
யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தங்கள் பதிவுகளின் அடிப்படை தகவல்களை வெளியிட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக காவல்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது
2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. கடந்த 9மாதங்களில் 19 கொலைகள் இடம்பெற்றுள்ளது.. அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த இந்த வருடத்தில் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் காதல் விவகாரம் தொடர்பாக 21 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களினால் 3 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 8 பேர் யாழ் மாவட்டத்தைச் சேராத வெளி மாவட்டத்தவர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 27 பேர் சிறுமியர்கள் எனவும் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சம்பவத்தைத் தவிர வாள்வெட்டுச் சம்பவங்கள் வீடு உடைத்துக் கொள்ளைச் சம்பவங்கள் என பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் புள்ளிவிபரம் ஊடாக தெரிவித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூகவிரோத செயல்களில் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரம் ஊடாக யாழ் காவல்துறை அதிகாரி இந்த புள்ளிவிபர தகவலை தெரிவித்துள்ளார். காவல்துறையின் பாதிவிற்கு உட்டபடாத பல பாலியல் வல்லுறவு உள்ளிட்ட சமூகவிரோ செயல்கள் யாழில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post