Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரையரங்குகளை திருப்பதிக்கு ஒப்பிட்டு பேசிய நடிகர் கமல்.


அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய, இயக்குனரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த்,தமிழ் சினிமாவின் வருங்காலம் எப்படி அமையப்போகிறதோ என்ற தனது அச்சத்தை மிக வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு முறையும் இவ்வுலகில் ஒரு புதிய கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்படும் போது, மக்களால் அது மிக பெரியளவில் வரவேற்கப்படுவதுண்டு.ஆயினும் காலப் போக்கில்
அவை  இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவதுமுண்டு..அதேமாதிரி  காகிதம் கண்டுபிடிக்கபட்டபோது,மாட்டின் லூதர் கிங்,மிக பெரிய கண்டுபிடிப்பை இவ்வுலகம் நிகழ்த்தி விட்டதாக கொண்டாடினார், ஆயினும் இன்றைய காலகட்டத்தில் காகிதத்தின் பயன்பாடு மிக மிக குறைவாகவே உள்ளது.இதே நிலைமை நீடித்தால், ஒரு கால கட்டத்தில் காகிதம் முழுமையாக பயன்பாட்டிற்கு இல்லாமலே போய்விடும்.

இதே நிலைமைக்குத்தான் இன்றைய தமிழ் சினிமா சென்றுகொண்டிருக்கிறது.இன்றைய இளம் சமுதாயம் தமக்கு விரும்பிய படங்களை கணினி மற்றும் கையடக்க தொலைபேசியின் ஊடாகவே பார்த்து மகிழ்வதாகவும் இதனால் திரையரங்குக்கு செல்லும் மக்களின் அளவு பெருமளவில் குறைந்திருப்பதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.

இதே நிலைமை நீடித்தால் திரையரங்குகளில் படங்களை திரையிட பயன்படும் பட உருளை "ரீல்" அழியும் அபாயத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இவருடைய கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன்,மக்கள் தங்களுடைய வீடுகளில் பெருமாளின் படத்தை வைத்திருந்தாலும் கூட திருப்பதிக்கு சென்று அவருடைய முழுமையான  ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது போல், மக்கள்  எங்கு சென்று திரைப்படத்தை பார்த்தாலும், திரையரங்கிற்கு சென்று பார்ப்பதே ஒரு முழுமையான திருப்தியை அவர்களுக்கு கொடுக்கும் என தெரிவித்தார்.


[vuukle-powerbar-top]

Recent Post