Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தன்னுடைய பெண் இரசிகருக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் மாதவன்.


நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிகாகோ நகரில் இருந்து சென்னை வந்திருந்தார் நடிகர் மாதவன்.நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்ததாலும், அங்கு அவர் மேற்கொண்ட உடற்பயிற்சி முறைகளாலும் அவருடைய முழங்காலில் ஏற்பட்டிருந்த வலி முற்றிலுமாக குணமடைந்திருந்தது.

அண்மைக் காலமாக மிகவும் குண்டான தோற்றத்துடன் காணப்பட்ட மாதவன், தற்போது மிகவும் உடல் எடை குறைந்து புதுப் பொலிவுடன் காணப்பட்டார்.தலையை ஒட்டி வெட்டப்பட்டிருந்த அவருடைய தலைமுடியானது  "அலைபாயுதே" படத்தை ஞாபகப் படுத்துவதாக இருந்தது.

நடிகர் மாதவனை பொறுத்த வரை, அவருக்கு ஏராளமான பெண் இரசிகர்கள் உண்டு அதிலும் குறிப்பாக நடிகை குஷ்புவின் மகளான அனந்திதா மாதவனின் மிக பெரிய விசிறியாம். இதை மாதவனிடம் சொன்ன நடிகை குஷ்பூ நிச்சயம் ஒரு நாள் நீங்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என கூறியதாகவும் அதற்கு மாதவன் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

[vuukle-powerbar-top]

Recent Post