Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சவின் ஒருநாள் செலவு இரண்டு கோடி ரூபா

உலகளாவிய ரீதியில் வசிக்கும் மக்கள் மிகப்பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்றநிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 
ஒருநாள் செலவாக இரண்டு கோடி ரூபா நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி
ஒதுக்கீட்டில் மகிந்தவின் ஆண்டுச் செலவாக 740கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி மகிந்தவின் குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளினதும்மற்றும் அவரது நெருங்கிய சகாக்களின் அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீட்டிலும்அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.மகிந்தவின்  குடும்பம் மற்றும் சகாக்களுடன் தொடர்புடைய அமைச்சுகளுக்குமாகஅடுத்த வருடத்துக்காக
ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விபரம்.
1. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச – 740கோடி ரூபா,
2. பாதுகாப்பு அமைச்சு  (கோத்தாபய ராஜபக்ச) –  29,000கோடி ரூபா,
3. துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு (நாமல் ராஜபக்சவின்கட்டுப்பாட்டிலுள்ளது) – 13,161கோடி ரூபா
4. நிதி, திட்டமிடல் அமைச்சு (மகிந்த ராஜபக்ச)  – 8,746கோடி ரூபா
5. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (பசில் ராஜபக்ச)  - 8,890கோடி ரூபா
இதன்படி மொத்தமாக மகிந்த ராஜபக்ச  குடும்பத்துக்காக  2013ம் ஆண்டுக்கான  வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 61,000 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்கள் ஒருவேளை உணவுக்குகையேந்துகின்றனர். குழந்தைகள் பால் மா இன்றித் தவிக்கின்றன. யுத்தத்தால்காயப்பட்டவர்கள், மிகப் பெரும் ஊனமடைந்தவர்கள், பல்லாயிரக்கணக்கானவிதவைகள் இன்றுவரை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாதவர்களாய் உள்ளனர்.இதனைவிட இடம்பெயர்ந்த மக்களுக்கு வீட்டுத்திட்டங்களைஅமைத்துக்கொடுக்க இலங்கை அரசு இந்திய அரசிடம் கையேந்தி நிற்கின்றது.
இந்த நிலையில் மகிந்த குடும்பமும் மகிந்தவின் சகபாடிகளும் உல்லாச வாழ்க்கையைஅனுபவிக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம் அனுபவிக்கும் இவர்களைத்தான் உலகம் பாராட்டுகின்றதா? சொந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள் சோற்றுக்குஅழுகிறார்கள். வெந்த புண்ணின் வலி இன்னும் ஆறவில்லை. வேதனையால்துடிக்கிறார்கள். இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சிற்கு வெறும் 43 கோடியே 73லட்சத்து 27 ஆயிரம் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற நாடொன்றில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மீள்குடியேற்றம்மற்றும் மீள்கட்டுமானத்திற்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.ஆனால், இலங்கை  தொடர்ந்தும் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகவேநோக்குகின்றது என்பதற்கு மகிந்தவின் நாளாந்தச் செலவிற்கான நிதி ஒதுக்கீடும்மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடும் எடுத்துக்காட்டாகஉள்ளன.
தனியொரு நபரின் நாளாந்த செலவீனம் இரண்டு கோடி என்றால் நாடு எந்தளவு குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தவிடயத்திலிருந்தாதல் உலக நாடுகள் விழித்தெழுமா அல்லது தொடர்ந்தும் மகிந்தராஜபக்சவிற்குத்தான் ஆதரவாக நிற்குமா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாகக் கருத்துதெரிவித்த ஈழத் தமிழ் மகன் ஒருவர் இது சர்வாதிகார ஆட்சியின் உச்சக்கட்டம்.இதனைத் தொடர்ந்தும் அனுமதிப்பதனது நாட்டு மக்களுக்கு நல்லதல்ல என்றுகூறியுள்ளார்.
 மகிந்த விரைவில் மக்களால் தூக்கியெறியப்படுவது திண்ணம் என்றும்அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post