Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து மேலும் ஐந்து பேர்கள் விடுதலை



செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து மேலும் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி. தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது மேலும் ஐந்து ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

அவர்கள் பெயர்கள் வருமாறு. 

௧. ஜெயதாசன் ௨. அலெக்ஸ் ௩. நாகராசா ௪. நர்மதன் ௫. சதாசிவன்

ஆகியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே நடந்த உண்ணா நிலை போராட்டத்தின் போது காவல் துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் படிப்படியாக முகாம் தமிழர்களை விடுதலை செய்வோம் என உறுதியளித்தார். அதன் படி சென்ற மாதம் ஏழு பேர்களையும் , இம்மாதம் ஐந்து பேர்களையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 45 நாட்களில் இதுவரை 16 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்காக போராடிய அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் முகாம் தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post