Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலையால் பதிப்பு இல்லையாம் ~ அப்துல்கலாம் பேச்சு

அணுஉலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் எழிமலாவில் நடந்த ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களை எரிக்கும் போது, 2 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது என்று கூறிய அப்துல் கலாம், அணுஉலையால் எந்த சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுவதில்லை என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சூரியன், காற்று, அணு சக்திகளில் இருந்து மி்ன்சாரம் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உலகில் உள்ள 540 அணுஉலைகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அப்துல் கலாம், அணுஉலைகள் பற்றி கவலைப்பட தேவையி்ல்லை என்று கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post