Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகிந்தவின் முகத்தில் கரி பூசிய இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கையில் நடைபெற்ற ருவன்ரி-20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சொந்த மண்ணிலேயே படுதோல்வியடைந்துள்ளது. இலங்கை அணியை எதிர்த்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.



இலங்கையின் ஜனாதிபதியும் கொலை வெறியனுமாகிய மகிந்த ராஜபக்சவும் இன்றைய இறுதியாட்டத்தைக் காண வந்திருந்தார். இறுதியாட்டத்தில் இலங்கை அணியை உற்சாகப்படுத்துவதற்கு மகிந்த வந்திருந்த போதிலும் இலங்கை படுதோல்வியைத் தழுவிக்கொண்டமை மகிந்தவை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இலங்கை அணி படுதோல்வியைத் தழுவிக்கொண்ட பின்னர் மகிந்த ராஜபக்ச அரங்கை விட்டு மனக்கவலையுடன் வெளியேறியமையை அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் நடைபெற்று வந்த நான்காவது ருவன்ரி-20 உலக கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சார்லஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், கெய்ல் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்   மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் பெரும் அதிர்ச்சியடைந்தது.
அதன் பின் இணைந்த சாமுவேல்ஸ், பிராவோ ஆகியோர் நிதானமாக விளையாடினர். இந்நிலையில் பிராவோ 19 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சமி நிதானமாக விளையாடி 26 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெயவர்த்தன 33 ஓட்டங்களிலும், டில்சான் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், சங்கக்காரா 22 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த வீரர்கள் தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது. முடிவில் இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். விளையாட்டில் விருப்பு வெறுப்புக்கள் வேறானவை என்று கூறுகின்ற சில ரசிகர்கள் இலங்கை அணியை ஆதரித்த போதிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். தமிழ் மக்களை குரூரமாக கொலை செய்த கொலை வெறியன் மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் செயற்படுகின்ற இலங்கை அணியை ஈழத் தமிழ் மக்கள் வெறுத்தனர்.
இந்த நிலையில் ருவன்ரி ருவன்ரி கிறிக்கட் போட்டிகளின்  இறுதியாட்டம் இன்று கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போதிலும் தமிழர் தாயகத்திலுள்ள கிறிக்கெட் ரசிகர்கள் பல இடங்களிலும் குறுந்திரைகளை அமைத்து ஆட்டத்தைக் கண்டு களித்தனர். குறிப்பாக மானிப்பாய் துரையப்பா விளையாட்டரங்கம், தென்மராட்சியில் சாவகச்சேரி நகர், மானிப்பாய் நகர் மற்றும் நெல்லியடி நகர் உட்பட பல இடங்களிலும் குறுந்திரைகள் மற்றும் projector  களைக் கட்டியிருந்த ரசிகர்கள் அங்கிருந்து ஆட்டத்தைக் கண்டு களித்ததுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதேபோன்று ஆட்டம் நடைபெற்ற பிரேமதாசா அரங்கில் கூடியிருந்த தமிழ் ரசிகர்களும் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே தமது ஆதரவை வழங்கினர்.
ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றவுடன் யாழ். முற்றவெளி மற்றும் மானிப்பாய், சாவகச்சேரி ஆகிய  இடங்களில் குழுமி நின்று பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வாண வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இவர்கள் தமக்குள் இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர்.  இதேவேளை சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி மீள முடியாத அதிர்ச்சியிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post